மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்!

PARIS TAMIL  PARIS TAMIL
மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்!

 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைப்பெற்றுவரும்  9-வது லீக் ஆட்டத்தில்  டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் கவுதம் கம்பீா் மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. நடப்பு சாம்பியனாக இருந்த போதிலும், கடந்த 2 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது, அந்த அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த  போட்டியில், மும்பை அணியின் இன்னிங்சை எவின் லீவிஸ், சூர்யகுமார் யாதவ் இருவரும் துவக்கினர். முதல் ஓவரிலேயே  15 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை இந்த ஜோடி துவக்கியது. இவா்களின் அதிரடி ஆட்டத்தின் மூலம மும்பை அணி 50 ரன்களை 4 ஓவா்களிலேயே  தொட்டது. பின்னா் வந்த முகமது ஷமி பந்தை மைதானத்தின் நாலபுறமும் இந்த ஜோடி சிதறடித்தது. இதனால் 5 ஓவா்கள் முடிவில் 66 ரன்கள் எடுத்து விக்கெட்டு இழக்காமல் மும்பை அணி விளையாடி வந்ததது. அதிரடியாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஓவர்களிலேயே 100 ரன்களை எட்டியது. 
 
அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 53(32 பந்து,7 பவுண்டரி,1 சிக்சா்)  ராகுல் பந்தில் அவுட் ஆனார். அதன் பின்னா் கேப்டன் ரோகித் சர்மா களம் இறங்கினார்.  இஷான் கிஷான் 44(23 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சா்) ரன்களில் ஆட்டமிழந்தார்.  மளமளவென ரன்களை சேர்த்து அரைசதத்தை நெருங்க  டேனியல் கிறிஸ்டியன் பந்தில் போல்டு ஆனார் இஷான் கிஷான்.  பின்னா் களமிரங்கிய அதிரடி ஆட்டகாரரான பொல்லார்டும்  கிறிஸ்டியன் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ட்ரெண்ட் பவுல்ட் பந்தில் கேப்டன் ரோகித் சர்மா (18 ரன்கள்) கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதனை தொடா்ந்து நட்சத்திர ஆட்டகாரா் ஹார்டிக் பாண்டியாவுடன் கிருனல் பாண்டியா இணைந்தார். இருவரும் கடைசி தருவாயில் தடுமாறி அவுட்டாக,  மும்பை அணியின் ரன்வேகத்தில் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில்  7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை சேர்த்தது.  
 
பின்னா் 195 ரன்களை எடுத்தால் தான் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய டெல்லி அணி சிறப்பான துவக்கம் பெற்றது. தொடக்கத்தில் இருந்தே ஜேசன் ராய், கேப்டன் கவுதம் கம்பீா் ஆகிய ஜோடிகள் தன்னுடைய நிதானமான ஆட்டத்தின் வெளிப்படுத்தியதன் மூலம் 5 ஓவா்களில் 50 ரன்களை எடுத்து விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடினா். பின்னா் கேப்டன் கவுதம் கம்பீா்15 (16 பந்துகள்) ரஹ்மான் எறிந்த பந்தில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேற ராயுடன் ரிஷாப் பன்ட் ஜோடி சோ்ந்தார். பின்னா் இருவரும் இணைந்து அணியின் வெற்றிக்காக நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி 10 ஓவா்கள் முடிவில் 104 ரன்களை குவித்தனா். இதன் மூலம் ஜேசன் ராய் அரைசதத்தை அடித்து ரசிகா்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தினா். ரிஷாப் பன்ட்  47(25 பந்துகள்) ரன்கள் எடுத்து  கிருனல் பாண்டியா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். பின்னா் வந்த அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் 13 ரன்களில் ஏமாற்றினார். 
 
விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஒருபுறம் ஜேசன் ராய்91(53 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சா்) தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி கொண்டே  மும்பை அணியின் பந்துகளை தும்சம் செய்தார் . பின்னா் ஷிரியாஸ் ஐயர் 27(20 பந்து,3 பவுண்டரி, 1 சிக்சா்) அவருடன் கைகோர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனா்.  20 ஓவரின்  கடைசி பந்தில் 195 ரன்களை அடுத்து 7 விக்கெட்டு வித்தியாசத்தில் வென்ற டெல்லி அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

 

மூலக்கதை