ரசிகர்களை நெகிழவைத்த தினேஸ் கார்த்திக் - ஷாரு கானின் செயல்! வீடியோ இணைப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
ரசிகர்களை நெகிழவைத்த தினேஸ் கார்த்திக்  ஷாரு கானின் செயல்! வீடியோ இணைப்பு

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் போட்டிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதுடன், அதில் சில நல்ல விடயங்களும் நடந்து வருகின்றன.
 
இதன் ஒருபடியாக கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரு கான் மற்றும் அணித்தலைவர் தினேஸ் கார்த்திக் ஆகியோர் மாற்றுத்திறனாளி ஒருவரை சந்தித்த காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
 
இதில் மாற்று திறனாளியிடம் யதார்த்தமாக நடந்துக்கொள்ளும் ஷாரு கான், அவருக்கு கிண்ணம் ஒன்றை வழங்கி அவரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.
 
அத்துடன் தினேஸ் கார்த்திக் இந்திய ரூபாயில் ஒரு இலட்சம் ரூபாவை, குறித்த நபரிடம் கொடுக்கிறார்.
 
தற்போது இந்த காணொளி சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.
 
 

மூலக்கதை