10 தீவிரவாதிகளுக்கு தூக்கு: பாக். ராணுவ தளபதி ஒப்புதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
10 தீவிரவாதிகளுக்கு தூக்கு: பாக். ராணுவ தளபதி ஒப்புதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு உயிரிழப்புகளை ஏற்படுத்திய 10 தீவிரவாதிகளுக்கு ராணுவ கோர்ட் விதித்த மரண தண்டனையை அந்நாட்டின் ராணுவ தளபதி உறுதி செய்துள்ளார். பல்வேறு தீவிரவாத செயல்களிலில் ஈடுபட்டதாக முகமது இஸ்டாக், முகமது ரபீக், முகமது ஆரிஷ், ஹபிபுர் ரகுமான், முகமது பயஸ், இஸ்மாயில் ஷா, முகமது பசல், ஹஸ்ரத் அலி, முகமது ஆசிம், ஹபிபுல்லா ஆகிய 10 பேரை பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஆண்டு கைது செய்தது.

இவர்கள் 62 பேரை கொன்று குவித்தவர்கள் என அந்த நாட்டின் ராணுவம் குற்றம் சாட்டியது.

குறிப்பாக முகமது இஸ்டாக்கும், முகமது ஆசிமும் சேர்ந்து பாகிஸ்தானின் சுபி மத இசைக்கலைஞரான அம்ஜத் சப்ரியையும், சட்ட அமலாக்கல் பிரிவினரையும் கொன்றவர்கள் ஆவர். இவர்கள் மீதான விசாரணை ராணுவ கோர்ட்டில் நடைபெற்றது.

கடந்த மாதம் 10 தீவிரவாதிகளுக்கும் மரண தண்டனை விதித்து ராணுவ கோர்ட் தீர்ப்பளித்தது. இந்நிலையில் இவர்களின் மரண தண்டனையை அந்த நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா உறுதி செய்து உள்ளார்.

எனவே 10 தீவிரவாதிகளும் எந்த நேரத்திலும் தூக்கில் போடப்படலாம் என அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

.

மூலக்கதை