அமெரிக்காவில் யூடியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: 3 பேர் காயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்காவில் யூடியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: 3 பேர் காயம்

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் யூடியூப் சமூக வலைதள தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய பெண் தற்கொலை செய்து கொண்டார்.

. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து 11 மைல் தொலைவில் உள்ள சான் பருனோ என்ற இடத்தில் பிரபல சமூக வலைதளமான யூடியூப் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு திடீரென துப்பாக்கிச்சூடு  நடைபெற்றது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயம் அடைந்ததனர்.



துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.   சம்பவ இடத்திற்கு சான்பருனோ நகர போலீசார் விரைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சூடுக்கு எந்த உள்நோக்கமும் இருப்பதாக உடனடியாக தெரியவில்லை என்று  போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

.

மூலக்கதை