சீன அதிபருடன் கிம் ஜாங் சந்திப்பு எதிரொலி: அணு ஆயுத சோதனை நிறுத்த வடகொரியா முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீன அதிபருடன் கிம் ஜாங் சந்திப்பு எதிரொலி: அணு ஆயுத சோதனை நிறுத்த வடகொரியா முடிவு

பீஜிங்: உலக நாடுகளின் எதிர்ப்பினை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது.   கண்டம் விட்டு கண்டம் செல்லும் திறன் படைத்த ஏவுகணை பரிசோதனைகளையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீன நாட்டுக்கு கடந்த ஞாயிற்று கிழமை 4 நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டார்.   தொடர்ந்து 2 நாட்களாக இந்த பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட விவரங்கள் ரகசியம் காக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளும் சீனாவுக்கு கிம் மேற்கொண்ட பயணத்தினை இன்று உறுதி செய்துள்ளது. இந்த பயணத்தில் வாழ்நாள் முழுவதும் பதவி வகிக்கும் வகையில் மீண்டும் தேர்வான சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சந்தித்து பேசினார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு பதவியேற்ற பின் கிம் வெளிநாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம்.   அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடன் சந்திப்புகளை நடத்த தயாராகும் முயற்சியில் கிம் ஈடுபட்டு உள்ளார் என அரசியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வடகொரியாவுடன் நெருங்கிய நட்பு நாடான சீனாவில் இருந்து வெளிவரும் ஜின்ஹுவா நாளிதழில், வடகொரியாவில் அணு ஆயுத சோதனைகளை நிறுத்துவது என்ற முடிவை மேற்கொள்ள உள்ளோம் என கிம் ஜாங் உன் சீன அதிபர் ஜின்பிங்கிடம் உறுதியளித்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், இரு நாடுகளுக்கு இடையே மாநாட்டு கூட்டம் நடத்தவும் வடகொரியா தயாராக உள்ளது என கிம் கூறியுள்ளார் என தெரிவித்து உள்ளது.

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா செயல்பட்டால் அணு ஆயுத விவகாரம் தீர்க்கப்படும் என்றும் கிம் கூறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

.

மூலக்கதை