இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜகார்தா: இந்தோனேசியாவில் இன்று அதிகாலை 6. 4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து  சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாைல 6. 4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.   பான்டா கடலில், கடல் மட்டத்துக்கு கீழ் 171 கி. மீ. , ஆழத்தில் ஏற்றபட்ட இந்நிலநடுக்கம், ரிக்டரில் 6. 4 ஆக பதிவாகியுள்ளது.

கடும் நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6. 4 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், இந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் உள்ள சாம்லகி பகுதியில் கடல் பகுதியை ஒட்டியுள்ள வடமேற்கே சுமார் 222 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்ததாக  அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புவியியல் அமைப்பில் அடிக்கடி நிலநடுக்கங்களை எதிர்கொள்ளும் ரிங் ஆப் பயர் எனப்படும் ஆபத்தான பகுதியில் இந்தோனேசியாவின் கிழக்கு பகுதி அமைந்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக இந்திய பெருங்கடலில் உள்ள நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கிறது.

.

மூலக்கதை