கோவில் பண்டிகை வைப்பதில் தகராறு....! கலெக்டர் அலுவலகத்தில் மறியல் செய்த ஊர்மக்கள்

விகடன்  விகடன்
கோவில் பண்டிகை வைப்பதில் தகராறு....! கலெக்டர் அலுவலகத்தில் மறியல் செய்த ஊர்மக்கள்

 

எங்க ஊருக்குள் புகுந்து இன்னொருவன் பண்டிகை வைக்கிறான். நாங்க பண்டிகை வைத்தால் போலீஸிடம் சொல்லி தடுக்கிறான், என்று கூறி ஒரு கிராமத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்து வந்தனர். வந்தவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தின் எதிரே சாலை மறியலில் ஈடுப்பாட்டார்கள்.

இதுப்பற்றி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த முத்து, ''நாங்க சேலம் மாவட்டம் மல்லூருக்கு அருகே உள்ள பசுவநத்தம்பட்டி. எங்கள் ஊரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பஞ்சம் பிழைப்பதற்காக எங்க ஊருக்கு அருகில் உள்ள மேச்சேரியம்பாளையத்திற்கு பழனிசாமி, சின்னதம்பி, ராமன், லட்சுமணன், சக்திவேல் என ஒரு 7 குடும்பத்தினர் குடியேறினார்கள். 

அவர்கள் குடியிருக்கும் பகுதியில் மாரியம்மன் கோவில் இருக்கிறது. அந்த கோவிலில் தை மாதம் பண்டிகை கொண்டாடினார்கள். நாங்கள் யாரும் போகவில்லை. எங்க ஊரில் உள்ள வெந்தக்கல் மாரியம்மன் கோவிலுக்கு நாங்க கடந்த வாரம் பண்டிக்கை வைக்கலாம் என்று இருந்தோம். அவர்கள் போலீஸிடம் சொல்லி மாரியம்மன் பண்டிகை வைக்கக்கூடாது என்று தடுத்து நிறுத்தி விட்டார்கள். 

எங்க கோவிலுக்கு நாங்க பண்டிக்கை வைப்பதில் என்ன தவறு இருக்குன்னு கேட்டதற்கு அடியாட்களை கூட்டி வந்து ஊரில் உள்ள ஆம்பள, பொம்பளைகளை அடித்து துவைத்து எடுத்துட்டாங்க. இனியும் சும்மா இருந்தால் பிரயோஜனம் இல்லை என்று கலெக்டரம்மாவை சந்தித்து தகவலை சொல்லி விட்டு ஊருக்கு போய் பண்டிக்கை வைக்க முடிவு எடுத்து இங்கு வந்திருக்கிறோம்'' என்றார்.

மூலக்கதை