முன்­கூட்­டியே துவங்­குமா மீன்­பிடி தடை காலம்

தினமலர்  தினமலர்
முன்­கூட்­டியே துவங்­குமா மீன்­பிடி தடை காலம்

சென்னை : மீன்­பிடி தடையை முன்­கூட்­டியே துவக்க வேண்­டும் என, மீன­வர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

மீன்­வ­ரத்து குறைந்­துள்­ள­தால், வஞ்­சி­ரம், வவ்­வால் உள்­ளிட்ட மீன் வகை­க­ளின் விலை எகி­றி­யுள்­ளது. சில்­லரை விற்­ப­னை­யில், 1 கிலோ வஞ்­சி­ரம், 500 – 700 ரூபாய் வரை விற்­கப்­ப­டு­கிறது. ஏரி­களில் வளர்க்­கப்­படும் கட்லா, ஜிலேபி உள்­ளிட்ட மீன்­கள், ஒரு கிலோ, 100 -– 300 ரூபாய் வரை விற்­ப­னை­யா­கிறது. வெயில் ஆரம்­பித்­துள்­ள­தால், கரு­வாடு தயா­ரிப்பு பணி­கள் மும்­மு­ர­மா­கி­யுள்­ளன.

விரை­வில் மீன்­பிடி தடை காலம் துவங்­கு­வ­தால், காசி­மேடு, பழ­வேற்­காடு உள்­ளிட்ட பகு­தி­களில், மீன்­களை கரு­வாட்­டுக்­காக பதப்­ப­டுத்­தும் பணி­களில் மீன­வர்­கள் ஈடு­பட்­டுள்­ள­னர்.இதற்­கி­டையே மீன்­பிடி தடையை ஒரு மாதத்­திற்கு முன்­ன­தாக துவக்க வேண்­டும் என, மீன­வர்­கள் கூறி­னர்.

இது­கு­றித்து அவர்­கள் கூறி­ய­தா­வது: கடந்த சில ஆண்­டு­க­ளாக, மீன்­வ­ளம் குறைந்து வரு­கிறது. கடல்­நீர் மாசு கார­ண­மா­க­வும், அண்டை மாநி­லத்­தோடு இணைந்த மீன்­பிடி தடை காலம் இல்­லா­த­தா­லும், மீன்­வ­ளம் தொடர்ந்து குறைந்து வரு­கிறது. ஆந்­திரா, கேரளா, தமி­ழ­கம் என, மூன்று மாநி­லத்­தி­லும் ஒரே நேரத்­தில் மீன்­பிடி தடையை அமல்­ப­டுத்தி, கடல் மாசுவை குறைக்க வேண்­டும். இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

மூலக்கதை