சரியும் எல்.ஐ.சி., நிறுவன பங்கு முதலீட்டு மதிப்பு

தினமலர்  தினமலர்
சரியும் எல்.ஐ.சி., நிறுவன பங்கு முதலீட்டு மதிப்பு

புதுடில்லி |: இந்­தாண்டு, எல்.ஐ.சி., நிறு­வ­னத்­தின் பங்கு முத­லீட்டு மதிப்பு, 20 ஆயி­ரம் கோடி ரூபாய் வரை சரி­வ­டைந்­துள்­ளது.

இது குறித்து, கேப்­பி­ட­லைன் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள, பொதுத் துறை­யைச் சேர்ந்த, 53 நிறு­வன பங்­கு­களில், எல்.ஐ.சி., செய்­துள்ள முத­லீ­டு­க­ளின் மதிப்பு, 20 ஆயி­ரம் கோடி ரூபாய் வரை குறைந்­துள்­ளது. இந்த நிறு­வ­னங்­க­ளின் பங்கு விலை வீழ்ச்­சி­யால், மதிப்பு சரி­வ­டைந்­து உள்­ளது. இதில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யா­வில் மேற்­கொண்ட முத­லீட்­டில் ­தான், எல்.ஐ.சி.,யின் பங்கு மதிப்பு, அதி­க­பட்­ச­மாக, 5,500 கோடி ரூபாய் குறைந்­துள்­ளது.

இதே காலத்­தில், பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யில், எல்.ஐ.சி., செய்­தி­ருந்த பங்கு முத­லீட்­டின் மதிப்பு, 2,500 ரூபாய் வரை குறைந்­துள்­ளது. பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள, பொதுத் துறை நிறு­வ­னங்­களில், 10ல், 9 நிறு­வ­னங்­க­ளின் பங்கு மூல­தன மதிப்பு, 40 சத­வீ­தம் வரை சரிந்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. ரவ் ­மோடி மோசடி, திவால் நட­வ­டிக்கை போன்ற பல்­வேறு கார­ணங்­க­ளால், பொதுத் துறை மட்­டு­மின்றி தனி­யார் துறை நிறு­வ­னங்­க­ளின் பங்கு மதிப்­பும் குறைந்­துள்­ளது.

மூலக்கதை