‘12 முக்கிய சேவை பிரிவுகளை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு’

தினமலர்  தினமலர்
‘12 முக்கிய சேவை பிரிவுகளை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு’

மும்பை : ‘‘நாட்­டின் ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த, சேவை­கள் துறை­யில், 12 முக்­கிய பிரி­வு­களை ஊக்­கு­விக்க, அரசு திட்­ட­மிட்­டுள்­ளது,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு தெரி­வித்­து உள்­ளார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது: சில மாதங்­க­ளாக, நாட்­டின் ஏற்­று­மதி உயர்ந்து வரு­கிறது. பாரம்­ப­ரிய சரக்­கு­கள் மட்­டு­மின்றி, புதிய பொருட்­களும் ஏற்­று­மதி செய்­யப்­பட வேண்­டும் என, அரசு விரும்­பு­கிறது. இதை­யொட்டி, சேவை­கள் துறை­யில், ஊக்­கு­விப்பு திட்­டத்­திற்­காக, 12 முக்­கிய பிரி­வு­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன.

மத்­திய அரசு ஏற்­க­னவே சேவை­கள் துறை­யைச் சேர்ந்த, சுற்­றுலா, ஓட்­டல், தக­வல் தொழில்­நுட்­பம் உள்­ளிட்ட, 12 பிரி­வு­கள் வளர்ச்­சிக்­கான, 5,000 கோடி ரூபாய் திட்­டத்­திற்கு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. இதன்­படி, ஒவ்­வொரு சேவைப் பிரி­வும், உள்­நாடு மற்­றும் வெளி­நாட்டு வர்த்­த­கத்­தில் வளர்ச்சி காண, நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு, சேவை­கள் துறை, குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்­கு­கிறது. சேவை­கள் துறை, சர்­வ­தேச தரத்­தில் சேவை­களை வழங்­கு­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டும்.ரசா­ய­னத் துறை, மிகச் சிறந்த வளர்ச்சி வாய்ப்பை கொண்­டுள்­ளது. ஏற்­று­மதி தேவையை பூர்த்தி செய்­யக் கூடிய ஆற்­றல், இத்­து­றைக்கு உள்­ளது. இது­போல, வளர்ச்சி கண்டு வரும் துறை­களை ஊக்­கு­வித்து, ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க, அடுத்த சில மாதங்­களில், புதிய தொழில் கொள்கை வெளி­யி­டப்­படும்.

வேளாண் ஏற்­று­மதி கொள்­கை­யும், பொது கருத்­துக்கு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. வேளாண் சந்­தை­களில் இருந்து விளை­ப்பொ­ருட்­களை ஏற்­று­மதி செய்­வ­தற்கு, சரக்கு விமான கொள்­கையை, விமான போக்­கு­வ­ரத்து அமைச்­ச­கம் உரு­வாக்கி வரு­கிறது. இத்­திட்­டத்­தில் முத­லீடு செய்ய, சவுதி அரே­பியா, ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸ் ஆகி­யவை ஆர்­வ­மாக உள்­ளன. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை