பட்டு தொழில் வளர்ச்சிக்கு புதிய செயல் திட்டம்

தினமலர்  தினமலர்
பட்டு தொழில் வளர்ச்சிக்கு புதிய செயல் திட்டம்

புதுடில்லி : மத்­திய அரசு, பட்டு வளர்ப்பு துறைக்கு என, ‘பட்­டுத் தொழில் மேம்­பாட்­டிற்­கான ஒருங்­கி­ணைந்த திட்­டம்’ என்ற செயல் திட்­டத்தை உரு­வாக்­கி­யுள்­ளது.

அடுத்த மூன்று ஆண்­டு­களில், 2,161.88 கோடி ரூபாய் ஒதுக்­கீட்­டில், நிறை­வேற்­றப்­பட உள்ள இத்­திட்­டத்­திற்கு, பொரு­ளா­தார விவ­கா­ரங்­க­ளுக்­கான மத்­திய அமைச்­ச­ரவை குழு, நேற்று ஒப்­பு­தல் வழங்­கி­யது.

இது குறித்து, மத்­திய ஜவுளி துறை அமைச்­சர், ஸ்மி­ருதி இரானி கூறி­ய­தா­வது: கடந்த, 2016- – 17ம் நிதி­யாண்­டில், நாட்­டின் பட்டு உற்­பத்தி, 30 ஆயி­ரத்து, 348 டன்­னாக இருந்­தது. இதை, 2019 -– 20ல், 38 ஆயி­ரத்து, 500 டன்­னாக உயர்த்த, பட்­டுத் தொழில் மேம்­பாட்­டிற்­கான ஒருங்­கி­ணைந்த திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. பட்­டுத் துறை­யில் ஆராய்ச்சி மற்­றும் மேம்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் மூலம், நவீன தொழில்­நுட்­பங்­களை புகுத்தி, தர­மான பட்டு வகை­களை உரு­வாக்­க­வும், பட்டு உற்­பத்­தியை பெருக்­க­வும், வேலை­வாய்ப்பை அதி­க­ரிக்­க­வும் இந்த திட்­டம் உத­வும். மேலும், சீனா­வின் உயர்­தர பட்டு இறக்­கு­ம­தியை குறைத்து, அதற்கு நிக­ரான தரத்­தில் உள்­நாட்­டில் பட்டு உற்­பத்தி மேற்­கொள்ள துணை புரி­யும்.

ஏற்­க­னவே, ‘ஹைபி­ரிட்’ தொழில்­நுட்­பம்; கோடை மற்­றும் குளிர் காலம் என, இரு வகை தட்­ப­வெப்ப நிலை­யில், பட்­டுப் புழு வளர்ப்­ப­தில், நாடு முன்­னேற்­றம் கண்­டுள்­ளது. இதன் மூலம், உயர் தர­மான பட்டு உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­தால், 2013 -– 14ல், 7,000 டன்­னாக இருந்த சீனப் பட்டு இறக்­கு­மதி, 2016 -– 17ல், 3,700 டன்­னாக குறைந்­துள்­ளது. இதே காலத்­தில், உயர்­தர பட்டு உற்­பத்தி, 2,559 டன்­னில் இருந்து, 5,266 டன்­னாக உயர்ந்­துள்­ளது. இது, நடப்பு நிதி­யாண்­டில், 6,200 டன்­னாக அதி­க­ரிக்­கும்.

புதிய திட்­டத்­தின் மூலம், இந்த உற்­பத்­தியை, 2020ல், 8,500 டன்­னாக அதி­க­ரிக்க, இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. உயர் வகை பட்டு உற்­பத்தி, 2022ல், 12 ஆயி­ரம் டன்னை எட்­டும்­பட்­சத்­தில், அதன் இறக்­கு­ம­திக்கு, சீனாவை நாட வேண்­டிய அவ­சி­யம் இருக்­காது. தற்­போது, 1 ஹெக்­ட­ரில், 100 கிலோ பட்­டு உற்­பத்தி செய்­யப்­ப­டு­கிறது. இது, பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி மற்­றும் மேம்­பாட்டு பணி­கள் மூலம், 2019 – -20ல், 111 கிலோ­வாக அதி­க­ரிக்­கும். இத்­து­டன், தற்­போது, 85 லட்­சம் என்ற அள­வில் உள்ள, பட்டு வளர்ப்பு துறை­யின் வேலை­வாய்ப்பு, ஒரு கோடி­யாக உய­ரும்.

குறிப்­பாக, பெண்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பை­யும், தாழ்த்­தப்­பட்­டோர், பழங்­கு­டி­யி­னர் மற்­றும் பொரு­ளா­தா­ரத்­தில் பின்­தங்­கி­யுள்­ளோ­ரின் வாழ்­வா­தா­ரத்தை உயர்த்­த­வும், இத்­திட்­டம் துணை புரி­யும். உயர்­தர பட்­டுப் புழு, பட்­டுக் கூடு, கச்சா பட்டு ஆகி­ய­வற்றை உரு­வாக்க, பட்­டுக் கூடு ஆய்வு மையங்­கள் மற்­றும் பட்டு பரி­சோ­தனை மையங்­கள் ஏற்­ப­டுத்­தப்­படும்.மொத்­தத்­தில், 2022ல், நாடு, பட்டு உற்­பத்­தி­யில் தன்­னி­றைவு பெற, இத்­திட்­டம் உத­வும். இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.

ஐந்து மாநிலங்கள்:
உல­கில், பட்டு உற்­பத்­தி­யில் சீனா முத­லி­டத்­தில் உள்­ளது. அடுத்­துள்ள இந்­தி­யா­வில், 97 சத­வீ­தம் கச்சா மல்­பரி பட்டு வகை­கள், தமி­ழ­கம், ஆந்­திரா, கர்­நா­டகா, ஜம்மு – காஷ்­மீர், மேற்கு வங்­கம் ஆகிய, ஐந்து மாநி­லங்­களில் உற்­பத்­தி­யா­கின்­றன.

மூலக்கதை