சூர்யா படத்தில் புருவ அழகி? - கே.வி.ஆனந்த் மறுப்பு

தினமலர்  தினமலர்
சூர்யா படத்தில் புருவ அழகி?  கே.வி.ஆனந்த் மறுப்பு

மலையாளத்தில் ஒரு ஆடார் லவ் என்ற படத்தில் நடித்திருப்பவர் நடிகை பிரியா வாரியர். அந்த படமே இன்னும் திரைக்கு வராத நிலையில், அப்படத்தின் பாடல், டீசரில் அவர் தனது புருவத்தை வளைத்து காதல் செய்த காட்சி பெரிய அளவில் வைரலானதோடு இந்தியா முழுக்க பிரபலமானார்.

மலையாளத்தில் சில படங்களில் நடிக்க பேசி வரும் அவர், தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படத்திலும் நடிக்கயிருப்பதாக செய்திகள் பரவின.

ஆனால், கே.வி.ஆனந்த் மறுத்துள்ளார். இந்த படத்தில் நடிக்க சில முன்னணி நடிகைகளிடம் தான் பேசி வருகிறேன். பிரியா வாரியரை நடிக்க வைக்கும் எந்த ஐடியாவும் இல்லை என்று அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மூலக்கதை