ஒய்எஸ்ஆர் வாழ்க்கை படத்திற்கு தலைப்பு முடிவானது

தினமலர்  தினமலர்
ஒய்எஸ்ஆர் வாழ்க்கை படத்திற்கு தலைப்பு முடிவானது

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் திரைப்படமாகிறது. இந்த படத்தை மகி வி.ராகவ் இயக்குகிறார். இப்படத்தில் ஒய்எஸ்ஆர் வேடத்தில் நடிக்க பல தெலுங்கு நடிகர்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதியில் மலையாள நடிகர் மம்முட்டி பொறுத்தமாக இருப்பார் என்று அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மம்முட்டியைத் தொடர்ந்து மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடந்து வரும் நிலையில், தற்போது ஸ்கிரிப்ட் வேலைகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், அப்படத்திற்கு யாத்ரா என்று தலைப்பு வைத்திருப்பதாக தற்போது இயக்குனர் மகி வி.ராகவ் அறிவித்துள்ளார்.

மூலக்கதை