டெம்பர் தமிழ் ரீமேக்கில் விஷால்?

தினமலர்  தினமலர்
டெம்பர் தமிழ் ரீமேக்கில் விஷால்?

2015-ல் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால் நடித்து வெளியான வெற்றிப்படம் டெம்பர். பூரி ஜெகன்னாத் இயக்கியிருந்தார். தற்போது இந்தப்படம் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரீ-மேக்காகி வருகிறது.

இந்த நிலையில், தமிழிலும் ரீமேக் ஆகயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் வெங்கட்மோகன் இதை இயக்க, விஷால் - ராசி கண்ணா இணைந்து நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை