4வது முறையாக பொறுப்பேற்பு: ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
4வது முறையாக பொறுப்பேற்பு: ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி:  ஜெர்மனியின் பிரதமராக 4வது முறையாக பொறுப்பேற்றுள்ள ஏஞ்சலா மெர்க்கலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் கடந்தாண்டு செப்டம்பரில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடந்தது.

கிறித்துவ சோஷலிச யூனியன் கட்சி சார்பில், ஏஞ்சலா மெர்கல் போட்டியிட்டார். இக்கட்சி 33 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது.   பெரும்பான்மை பலம் இல்லாததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

எனவே, சோஷியல் குடியரசு கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இடைக்கால அரசு நடைபெற்று வந்தது.

தற்காலிக பிரதமராக ஏஞ்சலா மெர்கல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், தற்போது இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

ஏஞ்சலா மெர்கல் தலைமையிலான அரசு அமைய சோஷியல் குடியரசு கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து நேற்று வாக்களித்தனர்.

இதன்மூலம் சுமார் 66 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. இதையடுத்து, ஜெர்மனி நாட்டு பிரதமராக 4வது முறையாக ஏஞ்சலா பொறுப்பேற்றார்.

ஏஞ்சலாவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏஞ்சலா மெர்கலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘‘ஜெர்மனியின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஏஞ்சலா மெர்க்கலுக்கு எனது வாழ்த்துக்கள்.

இருநாட்டு உறவுகள் மேம்படும் வகையில் தேவையான உதவிகளையும் இந்தியா அளிக்கும். வருகிற 22ம் தேதி ஜெர்மன் அதிபர் பிராங்க் வால்டர் இந்தியா வரவுள்ளார்.

அவரது பயணத்தை எதிர்நோக்கி உள்ளேன்’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


.

மூலக்கதை