தேர்தல் வெற்றிக்காக காங். எதையும் செய்யும் மாஜி பிரதமர் தேவகவுடா குற்றச்சாட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேர்தல் வெற்றிக்காக காங். எதையும் செய்யும் மாஜி பிரதமர் தேவகவுடா குற்றச்சாட்டு

பெங்களூரு: தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி எந்த அளவிற்கும் செல்லும் என மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவ கவுடா கூறியுள்ளார். கர்நாடக மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரவிருக்கிறது.

இந்நிலையில் அந்த மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத் சமூகத்தை தனி மதமாக காங்கிரஸ் அரசு அங்கீகரித்து உள்ளது. இதன் காரணமாக வீரசைவ - லிங்காயத் சமூகத்தினரிடையே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், “காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற எந்த அளவிற்கும் செல்லும்” என மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா கூறியுள்ளார்.

இது குறித்து கவுடா கூறுகையில், “லிங்காயத் சமூகத்தினருக்கு தனி மதமாக அங்கீகாரம் அளித்துள்ள செய்தி பயனுள்ளதா? இல்லையா? என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் காங்கிரஸ் அரசு லிங்காயத் சமூகத்தினரின் கோரிக்கையை தொடர்ந்து மறுத்து வந்தது.

ஆனால் தற்போது கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்த வேளையில், அச்சமூகத்தினருக்கு தனி மத அங்கீகாரம் அளித்துள்ளது. இதிலிருந்து காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற எந்த அளவிற்கும் செல்லும் என்பது தெளிவாக தெரிகிறது.

இவ்வாறு கவுடா கூறினார்.

.

மூலக்கதை