இனி பேச்சுவார்த்தை இல்லை: விஷால்

தினமலர்  தினமலர்
இனி பேச்சுவார்த்தை இல்லை: விஷால்

கடந்த 1-ம் தேதி முதல் சினிமா ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது. புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. படப்பிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப பணிகள் எதுவும் நடக்கவில்லை. பெரும்பாலான தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழ் திரைப்பட கூட்டமைப்பு நேற்று கூடியது. இதில் தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:

எங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் தொடரும். இதுகுறித்து விவாதித்தோம் நாளையும் (இன்று) விவாதிப்போம். டிஜிட்டல் சேவை அமைப்பினருடன் பலசுற்றுக்கள் பேசி விட்டோம். இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை. இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. பிரச்சினை தீர்வதற்கு டிஜிட்டல் சேவை அமைப்பினரும், தியேட்டர் உரிமையாளர்களும்தான் பேச வேண்டும். வேலை நிறுத்தம் தொடர்பாக கமல்ஹாசனை சந்தித்து விளக்கி இருக்கிறோம். விரைவில் ரஜினியை சந்தித்து பிரச்சினைகளை எடுத்துக் கூறுவோம் என்றார்.

மூலக்கதை