சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி ஆந்திராவில் போராட்டம் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தினகரன்  தினகரன்

ஐதராபாத்: ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திரா முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் இந்த கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பான்மையான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி பல்வேறு அரசியல் கட்சியினரும் பேரணி செல்கின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. பல இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இன்றும் 14-வது நாளாக அவையை முடக்கி ஆந்திர மாநில எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விஜயவாடா-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இடதுசாரி கட்சியைச் சேர்ந்தவர்களும் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மூலக்கதை