அனைத்து துறையிலும் ஒப்பந்த தொழிலாளர் வசதி

தினமலர்  தினமலர்
அனைத்து துறையிலும் ஒப்பந்த தொழிலாளர் வசதி

புதுடில்லி : குறுப்­பிட்ட காலத்­தில் முடிக்­கப்­படும் திட்­டங்­கள், பணி­கள் போன்­ற­வற்­றுக்கு தேவை­யான தொழி­லா­ளர்­களை, ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் பணி­ய­மர்த்­தும் வசதி, அனைத்து துறை­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­பட்டு உள்­ள­தாக, மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

தற்­போது, ஆயத்த ஆடை­கள் துறை­யில் மட்­டும், ஒப்­பந்த தொழி­லா­ளர்­களை பணி­ய­மர்த்த, தொழில் நிறு­வ­னங்­கள் சட்­டம், வகை செய்­கிறது. இதை, அனைத்து துறை­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்தி, சட்ட திருத்­தம் செய்­துள்­ள­தாக, மத்­திய தொழி­லா­ளர் மற்­றும் வேலை­வாய்ப்பு அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.

நேரடி நியமனம்:
இத­னால், பல்­வேறு துறை­களில், பருவ கால பணி­க­ளுக்கு தேவை­யா­ன­வர்­களை, நிறு­வ­னங்­கள் சுல­ப­மாக பணி­ய­மர்த்­திக் கொள்ள வழி ஏற்­பட்­டுள்­ளது. அதே­ச­ம­யம், ஒப்­பந்த தொழி­லா­ளர்­க­ளின் வாழ்­வா­தார பாது­காப்­புக்­கும், இந்த சட்ட திருத்­தம் உறுதி அளிக்­கிறது. தற்­போது, பெரும்­பா­லான நிறு­வ­னங்­கள், ஒப்­பந்­த­தா­ரர் மூல­மா­கவே, தற்­கா­லிக பணிக்­கான தொழி­லா­ளர்­களை ஒப்­பந்­தம் செய்­கின்­றன.

நிறு­வ­னம், ஒப்­பந்த தொழி­லா­ள­ருக்கு நிர்­ண­யிக்­கும் ஊதி­யத்­தில், ஒரு பகு­தியை, ஒப்­பந்­த­தா­ரர், தனக்­கு­ரிய கட்­ட­ண­மாக எடுத்­துக் கொள்­கி­றார். அத­னால், ஒப்­பந்த தொழி­லா­ள­ருக்கு, ஊதி­யம் குறை­வா­கவே கிடைக்­கிறது. மேலும், ஒரு நிறு­வ­னத்­தில், நிரந்­தர பணி­யா­ளர்­கள் பெறும் அனைத்து சலு­கை­களும், ஒப்­பந்த தொழி­லா­ளர்­க­ளுக்கு கிடைப்­ப­தில்லை. இந்த முரண்­பா­டு­க­ளுக்கு, தற்­போது முடிவு கட்­டப்­பட்­டுள்­ளது.

புதிய சட்ட திருத்­தத்­தில், இனி, அனைத்து துறை சார்ந்த நிறு­வ­னங்­களும், ஒப்­பந்­த­தா­ரர் தய­வின்றி, நேர­டி­யாக தற்­கா­லிக பணி­யா­ளர்­களை நிய­மிக்­க­லாம்.

ஊதியம்:
ஒரு நிறு­வ­னத்­தில், ஒரு பிரி­வில் நிரந்­தர பணி­யா­ளர்­கள் பெறும் ஊதி­யம் உள்­ளிட்ட அனைத்து சலு­கை­களும், அதே பிரி­வில் பணி­யாற்­றும் தற்­கா­லிக தொழி­லா­ளர்­க­ளுக்­கும் கிடைக்­கும். நிரந்­தர பணி­யா­ளர்­க­ளுக்கு நிக­ரான, பணி நேரம், ஊதி­யம் மற்­றும் சலு­கை­கள் ஒப்­பந்த தொழி­லா­ளர்­க­ளுக்­கும் கிடைக்­கும். மத்­திய அரசு, ஒப்­பந்த தொழி­லா­ளர் நடை­மு­றையை, அனைத்து துறை­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தி­யி­ருப்­பது, மிகப் பெரிய அள­வில், சர்­வ­தேச முத­லீ­டு­களை ஈர்க்க துணை புரி­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தொழிலாளருக்கான முக்கிய அம்சங்கள்:
* தொடர்ந்து மூன்று மாதங்­கள் பணி­யாற்­றி­ய­வரை, ஒப்­பந்த காலத்­திற்கு முன் நீக்க விரும்­பி­னால், அவ­ருக்கு, இரு வாரங்­க­ளுக்கு முன், நிறு­வ­னம், ‘நோட்­டீஸ்’ அளிக்க வேண்­டும்
* மூன்று மாதங்­க­ளுக்கு உள்­ளாக ஒரு­வரை நீக்க வேண்­டு­மென்­றால், அதற்­கான கார­ணங்­களை நிறு­வ­னம், எழுத்­து­பூர்­வ­மாக வழங்க வேண்­டும்
* ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் வேலை செய்­வோரை, ‘நடத்தை சரி­யில்லை’ என நீக்க முயன்­றால், பணி­யா­ளர், விளக்­கம் அளிக்க, நிறு­வ­னம் வாய்ப்பு வழங்க வேண்­டும்
* ஒப்­பந்­தம் புதுப்­பிக்­கப்­ப­ட­வில்லை என்ற கார­ணத்­தின் அடிப்­ப­டை­யில், ஒரு­வரை பணி நீக்­கம் செய்ய முடி­யாது.

மீண்டும்...
கடந்த, 2003ல், அப்­போ­தைய பிர­த­மர் வாஜ்­பாய், தற்­கா­லிக பணி­யா­ளர் நிய­ம­னத்­திற்கு அனு­மதி அளித்­தார். இதை, 2007ல், பிர­த­மர் மன்­மோ­கன் சிங் அரசு, ரத்து செய்­தது. தற்­போது, மோடி அரசு, மீண்­டும் அனு­மதி அளித்­துள்­ளது.

மூலக்கதை