‘பொது துறை வங்கிகளை தனியார் மயமாக்கலாம்’

தினமலர்  தினமலர்
‘பொது துறை வங்கிகளை தனியார் மயமாக்கலாம்’

பெங்களூரு : ‘‘நாட்­டில், வரி செலுத்­து­வோ­ரின் நலன் கருதி, பொதுத் துறை வங்­கி­களை தனி­யார் மய­மாக்­க­லாம்,’’ என, இன்­போ­சிஸ் செயல்­சாரா தலை­வர், நந்­தன் நிலே­கனி தெரி­வித்­துள்­ளார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது: வங்­கி­கள், 50 ஆண்­டு­க­ளுக்கு முன், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களை புறக்­க­ணித்து விட்டு, பெரிய நிறு­வ­னங்­க­ளுக்கு தாரா­ள­மாக கடன் வழங்கி வந்­தன. இதன் கார­ண­மா­கவே, வங்­கி­கள் தேசி­ய­ம­ய­மாக்­கப்­பட்­டன. இதை­ய­டுத்து, பொதுத் துறை வங்­கி­கள், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கும் தாரா­ள­மாக கடன் வழங்­கும் சூழல் உரு­வா­னது.

தற்­போது, பொதுத் துறை வங்­கி­க­ளின் நிலைப்­பாடு மாறி­விட்­டது. எந்த உண்­மை­யான கார­ணத்­திற்­காக அவை உரு­வாக்­கப்­பட்­ட­னவோ, அதற்கு அர்த்­த­மில்­லாத வகை­யில், பொதுத் துறை வங்­கி­க­ளின் செயல்­பா­டு­கள் உள்­ளன. பெரிய நிறு­வ­னங்­க­ளுக்கு கடன்­களை வாரி வழங்­கி­ய­தால், பொதுத் துறை­யைச் சேர்ந்த, 21 நிறு­வ­னங்­கள் தத்­த­ளிக்­கின்­றன.

எனவே, பொது­மக்­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் தீர்­மா­னிக்­கப்­படும், நிதிச் சந்தை கொள்­கை­களை, பொதுத் துறை வங்­கி­கள் பின்­பற்­ற­வது நல்­லது. இதற்­காக, இவ்­வங்­கி­களை தனி­யார் மய­மாக்­க­லாம். வரி செலுத்­து­வோ­ரின் நலன் கருதி, இந்த முடிவு எடுக்­க­லாம்.

பொதுத் துறை வங்­கி­களில், மத்­திய அர­சின் பங்கு மூல­த­னம், 70 சத­வீ­தம் அள­விற்கு உள்­ள­தால், இந்த யோச­னையை பரி­சீ­லிக்­க­லாம்.குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு கடன் பெறு­வ­தில் பாதிப்பு ஏற்­ப­டா­மல் இருக்க, தொழில்­நுட்­பம் சார்ந்த தீர்­வு­களை அறி­மு­கப்­ப­டுத்­த­லாம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

100 கோடியை எட்டும்:
அடுத்த ஓராண்­டில், வெற்­றிலை பாக்கு வாங்க கூட, மொபைல்­போ­னில், ‘க்யூ­ஆர் – கோடு’ ஸ்கேன் செய்து, பணம் செலுத்­து­வது பர­வ­லா­கும். 2016, அக்­டோ­ப­ரில், ‘யு.பி.ஐ.,’ பரி­வர்த்­தனை, 1 லட்­ச­மாக இருந்­தது. இது, 2018 பிப்­ர­வ­ரி­யில், 17.20 கோடி­யாக உயர்ந்­துள்­ளது; டிசம்­ப­ரில், 100 கோடியை எட்­டும்.
-நந்தன் நிலேகனி, செயல்சாரா தலைவர், இன்போசிஸ்

மூலக்கதை