10 நாடுகளுக்கு ஒற்றைச் சைக்கிளில் இரட்டை பயணம் மேற்கொண்ட ஜோடி!

PARIS TAMIL  PARIS TAMIL
10 நாடுகளுக்கு ஒற்றைச் சைக்கிளில் இரட்டை பயணம் மேற்கொண்ட ஜோடி!

இத்தாலியைச் சேர்ந்த இருவர், 10 நாடுகளுக்கு சைக்கிளில் பயணித்துள்ளனர்.

 
இத்தாலியைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி லெஸ்ஸன்ட்ரோ(31). அவரது மனைவி செய்ஃபானியா(30) ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் டேண்டம் சைக்கிள் எனப்படும், இரட்டை மிதிப்பான்கள் கொண்ட சைக்கிளில் சாகசப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
 
முதலில் இத்தாலியில் பயணத்தைத் தொடங்கி, குரோஷியா, கிரீஸ், துருக்கி, ஈரான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், சீனா, இந்தியா வை வந்தடைந்துள்ளார். சீனாவில் இருந்து கப்பல் மூலம் கொச்சி வந்து சேர்ந்தனர்.
 
அங்கு மூணாருக்கு சென்ற ஜோடி, பின்னர் மதுரை, ராமேஸ்வரம் வழியாக தனுஷ்கோடி வந்தனர். தங்கள் பயணத்தில் 10 நாடுகளின் 40,000 கிமீ தூரத்தைக் கடந்துள்ளார். நாள் ஒன்றுக்கு 100 முதல் 130 கி.மீ தூரம் பயணிக்கின்றனர்.
 
ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தங்களுடைய பயணத்தில் இந்தியாவின் கலாச்சாரம், விருந்தோம்பல் மிகவும் சிறப்பானது என அறிந்து கொண்டோம். இங்கு மக்களின் ஒற்றுமை ஆச்சரியப்பட வைக்கிறது.
 
செல்லும் இடமெங்கும் அற்புதமான உபசரிப்புகள் இருக்கின்றன. இந்திய உணவுகளில் இட்லி, சமோசா மிகவும் பிடித்தவை. ரயில் பாதையும், சாலையும் இணையாகச் செல்லும் பாம்பன் பாலம் பார்ப்பதற்கு மிகவும் சிறப்பானது.
 
சைக்கிளை பயணத்திற்கு தேர்வு செய்ததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மலிவான போக்குவரத்து. மற்றொரு ஆரோக்கியமான செயல்பாடு.
 
சைக்கிளிங் தான் எங்கள் உடல் நலத்திற்கு காரணம். தங்கள் பயணத்தை இத்தாலியில் 2020ல் முடித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

மூலக்கதை