ரத யாத்திரையை கண்டித்து தடையை மீறி போராட்டம் மு.க.ஸ்டாலின் உட்பட 75 எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரத யாத்திரையை கண்டித்து தடையை மீறி போராட்டம் மு.க.ஸ்டாலின் உட்பட 75 எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிவு

சென்னை: விஸ்வ இந்து பரிஷத் நடத்தும் ரத யாத்திரையை தடை ெசய்ய கோரி போராட்டம் நடத்திய தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு. க. ஸ்டாலின் உட்பட 75 எம்எல்ஏக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராம் ராஜ்ய யாத்திரை என்ற பெயரில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும் வகையில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த ரத யாத்திரையை தடுக்க கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் திட்டமிட்ட படி தமிழகத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் ரத யாத்திரை நடந்தது. இதைகண்டித்து திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தினர்.

அனைவரையும் ேபாலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் எழுந்து பேசினார். அப்போது தமிழகத்தில் மத நல்லிணக்கத்துக்கு எதிராக நடைபெறும் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்தும், அதனை எதிர்த்து குரல் எழுப்பிய பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டது குறித்தும் கேள்வி கேட்டார்.

அதற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். பின்னர் மு. க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதைதொடர்ந்து அனைவரும் தலைமை செயலகம் எதிரே உள்ள ராஜாஜி சாலைக்கு சென்று திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

அதைதொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு. க. ஸ்டாலின் உட்பட 75 எம்எல்ஏக்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் அனைவரையும் ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதைதொடர்ந்து நேற்று மாலை மு. க. ஸ்டாலின் உட்பட 75 எம்எல்ஏக்களையும் ேபாலீசார் விடுவித்தனர்.

இந்நிலையில் ரத யாத்திரையை கண்டித்து போராட்டம் நடத்தியதால் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் உட்பட 75 எம்எல்ஏக்கள் மீது கோட்டை போலீசார் அனுமதி இல்லாமல் ஒன்று கூடுவது, பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ெசய்துள்ளனர்.

இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை