ரூ.2.5 லட்சம் கோடியை பணக்காரர்களுக்காகக் கடன் தள்ளுபடி - ராகுல் ஆவேசம்

விகடன்  விகடன்
ரூ.2.5 லட்சம் கோடியை பணக்காரர்களுக்காகக் கடன் தள்ளுபடி  ராகுல் ஆவேசம்

பா.ஜ.க அரசு கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ரூ.2.5 லட்சம் கோடி கடனை, 15 பணக்காரர்களுக்காகத் தள்ளுபடி செய்தது என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் 84 வது தேசிய மாநாடு டெல்லி, இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது. ராகுல் தலைமையில் நடக்கும் முதல் மாநாடு இதுவாகும். இதில், மோடி தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு, வங்கி மோசடியில் தொடர்புள்ளது என்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்துள்ளதாகவும், மொழித் திணிப்பு போன்றவற்றைப் பா.ஜ.க அரசு செயல்படுத்தி வருகிறது என்று, மாநாட்டில் பங்கேற்று பேசிய, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினர்.  

இந்நிலையில், 'மத்தியில் ஆளும் மோடி அரசு, கடந்த சில ஆண்டுகளில் பா.ஜ.க அரசு ரூ.2.5 லட்சம் கோடி கடனை 15 பணக்காரர்களுக்காகத் தள்ளுபடி செய்தது. ஆனால், விவசாயிகள் கடன் தள்ளுபடி பற்றி பேசும் போதெல்லாம், பிரதமர் மோடியும் நிதித் துறை அமைச்சர் அருண் ஜெட்லியும், எங்களது கொள்கை அதுவல்ல என்கிறார்கள். ஆனால், கர்நாடகாவில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், விவசாயிகளின் ரூ.8,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது' என ராகுல் காந்தி மோடி அரசின் விவசாயிகள் கடன் தள்ளுபடியில் உள்ள நிலைப்பாட்டை விமர்சித்துள்ளார்.

மூலக்கதை