வாயிற்கதவை தட்டும் டீசல் டெலிவரி: இந்தியன் ஆயில் அறிமுகம்

தினமலர்  தினமலர்
வாயிற்கதவை தட்டும் டீசல் டெலிவரி: இந்தியன் ஆயில் அறிமுகம்

புனே : இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம், டோர் டெலிவரி மூலம், டீசலை வீட்டிற்கே கொண்டு வரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முன்னணி பெட்ரோலிய நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம், புதுமையாக வீட்டிற்கே வந்து டீசலை டெலிவரி செய்ய துவங்கியுள்ளது. இதற்காக, டீசல் டேங்கர் லாரியில், டிஸ்பென்சர் பொருத்தப்பட்டுள்ள வாகனத்தை, இந்தியன் ஆயில் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

முதற்கட்டமாக, மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை, விரைவில் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டோர் டெலிவரி சேவை, டீசலுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசல் டோர் டெலிவரி மூலம், பஸ், டிரக் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களின் நேரம் மற்றும் பணம் சேமிக்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை