காவிரி மேலாண்மை வாரியத்தில் இரட்டை வேடம் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி தலைவர் வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காவிரி மேலாண்மை வாரியத்தில் இரட்டை வேடம் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி தலைவர் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் வி. எம். எஸ். முஸ்தபா வெளியிட்ட அறிக்கை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விடாமுயற்சியால் போராடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உறுதியை அரசு இதழ்களில் வெளியிட செய்தார். இன்று உச்ச நீதிமன்றத்தால் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையான காவிரி நதிநீர் பிரச்னை பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் தீர்க்கப்பட்டபாடில்லை.

மத்தியில் ஆளும் பாஜ அரசிடம் மாநில உரிமைகளை பெற தவறிய எடப்பாடி பழனிச்சாமி, தற்சமயம் இரட்டை வேடம் போடுகிறார். அதிமுக எம். பி. க்கள் வெளிநடப்பு எனும் நாடகம் ஒரு புறமும், மத்திய அரசை எதிர்த்து போராடாமல் அழுத்தம் கொடுப்போம் என்று ஒரு அமைச்சரும் பேசி இருக்கிறார்.



மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று சொன்ன முன்னாள் எம். பி பழனிச்சாமியை கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். எல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை. சசிகலா வழியில், ஆர். கே. நகர் எம்எல்ஏ டி. டி. வி. தினகரன் தலைமையில் அமையப்போகும் உண்மையான அம்மா ஆட்சியில் தான் மக்களின் அனைத்து குறைகளும் தீர்க்கப்படும்.

அதுவரையில் மக்கள் பிரச்சனை தீரப்போவதில்லை.

தமிழக மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் பதவி ஒன்றையே பெரிதாக என்னும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை