டிடிவி தினகரனின் கருத்து என்னை காயப்படுத்தி உள்ளது: நாஞ்சில் சம்பத் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிடிவி தினகரனின் கருத்து என்னை காயப்படுத்தி உள்ளது: நாஞ்சில் சம்பத் பேட்டி

திருப்பூர்: திருப்பூரில் நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டி: டிடிவி தினகரன் சமீபத்தில் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் திராவிடம் இல்லையென கூறி கட்சியில் இருந்து வெளியேறினேன். அணியை விட்டு வெளியேற காரணம் தேடி கொண்டிருந்தவர் காரணம் கூறி விலகிவிட்டார் என டிடிவி தினகரன் கூறிய கருத்து என்னை காயப்படுத்தியுள்ளது.

எனது நேர்மையான நடவடிக்கைகளை அவர் நம்பவில்லையா என்ற கேள்வி எழுகிறது. அவரின் குற்றச்சாட்டு அவரையே சேரட்டும். காவிரி மேலாண்மை விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் தமிழக எம். பிக்களின் போராட்டம் மதிக்க கூடியது.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பொதுப்பணித்துறையை கவனிக்கும் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்து தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

வேறு கட்சிகளின் எந்த அழைப்பையும் நான் ஏற்கும் நிலையில் இல்லை.

இளைஞர்களுக்கு பேச்சு பயிற்சி வழங்கவும், இந்தாண்டுக்குள் 12 புத்தகங்கள் வெளியிட உள்ளேன். பணம் மதிப்பிழப்பு, ஜி. எஸ். டி. உட்பட பல்வேறு நடவடிக்கை மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு உள்ளது.

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதவருக்கு அபராதம் என்று இதுவரை சாமானிய மக்களிடம் 1716 கோடியை சுரண்டியுள்ளது வேதனையாக உள்ளது.

அதிமுக கவலைக்கிடமான நிலையில் அபாயச்சூழ்நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.

.

மூலக்கதை