3 பேர் மர்ம மரணம் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
3 பேர் மர்ம மரணம் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா(50), விவசாயி. இவரது மனைவி ஜெயமணி(45).

மூத்த மகள் தனுஷியா(18) ஈரோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டும், இளைய மகள் பவித்ரா(14) கவுந்தப்பாடி தனியார் பள்ளியில் 8ம் வகுப்பும் படித்து வந்தனர். பச்சபாலி என்ற இடத்தில இவர்களுக்கு சொந்தமான நெல் வயல் உள்ளது.

நேற்று அறுவடை பணி நடக்க இருந்ததால், அதிகாலை 5. 30 மணிக்கே ராஜா வயலுக்கு சென்று விட்டார். படுக்கை அறையில் தனுஷியாவும், பவித்ராவும் தூங்கிக்கொண்டிருந்தனர். ராஜா வெளியில் சென்ற சிறிது நேரத்தில், படுக்கை அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு கட்டிலில் ஜெயமணி கெரசினை ஊற்றி தீவைத்தார்.

தீ பட்டதும் திடுக்கிட்டு எழுந்த மகள்கள் அலறினர். ஜெயமணியும் தனது உடலில் கெரசின் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

வலி தாங்க முடியாமல் 2 மகள்களும் பாத்ரூமை நோக்கி ஓடினர். ெஜயமணியும் பின்னால் ஓடினார்.

பாத்ரூம் குழாயை திறந்துள்ளனர். ஆனால் தண்ணீர் வரவில்லை.

இதனால் சிறிது நேரத்திலேயே மூவரும் பாத்ரூமுக்குள்ளேயே கருகி இறந்தனர்.

தகவலறிந்து வயலுக்கு சென்ற ராஜா மற்றும் கவுந்தப்பாடி போலீசார் விரைந்து வந்தனர். முன்புற கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு 3 பேரும் பிணமாக கிடந்தனர். படுக்கை அறையும் எரிந்து நாசமானது.
கவுந்தப்பாடி போலீசார் 3 பேரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயமணி உள்ளிட்ட மூவரும் மூச்சு திணறி இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பாக போலீசார் வீட்டிலிருந்த செல்போனை கைப்பற்றி, ஜெயமணி, அவரது கணவர் ராஜா ஆகிேயார் கடைசியாக யாருடன் பேசினர் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ராஜா வயலுக்கு சென்றவுடன் மர்ம ஆசாமிகள் வீடு புகுந்து பணம், நகைக்காக கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை