25, 26ம்தேதிகளில் ராமநவமி விழா ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
25, 26ம்தேதிகளில் ராமநவமி விழா ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 26ம்தேதி ராம நவமி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்று ராமர் பட்டாபிஷேகம் நடைபெறும்.

இதையடுத்து வரும் 25ம்தேதி காலை சுப்ரபாத சேவையுடன் சுவாமி துயில் எழுப்பப்பட்டு தோமாலை, அர்ச்சனைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் ஏகாந்தமாக அர்ச்சகர்கள் மட்டும் பூஜைகளை செய்ய உள்ளனர். இதையடுத்து காலை 9 மணி முதல் சீதா ராம லட்சுமண சமேத அனுமந்தாழ்வார் உற்சவருக்கு பால், தேன், இளநீர், மஞ்சள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இரவு 7 மணி முதல் ராம நவமியையொட்டி மலையப்ப சுவாமி அனுமந்த வாகனத்தில் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

10 மணி முதல் தங்க கதவருகே ராம நவமி ஆஸ்தான நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

26ம் தேதி இரவு 8 மணிக்கு கோயில் அர்ச்சகர்கள் ராமர் பட்டாபிஷேகம் நடந்த உள்ளனர். இதையொட்டி 25ம் தேதி வசந்த உற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவை, 26ம் தேதி வசந்த உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

2. 84 கோடி காணிக்கைதிருப்பதி கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 50 ஆயிரத்து 194 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 19 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து இலவசமாகவும், மலைப்பாதை வழியாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 அறைகளில் காத்திருந்து 1 மணி நேரத்துக்கு பிறகும்,  300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்தும் தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது.

இதில் பக்தர்கள் 2. 84 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

.

மூலக்கதை