பரிசுக்குள் இலவச போக்குவரத்து! - ஆன் இதால்கோவின் புத்தம் புதிய திட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிசுக்குள் இலவச போக்குவரத்து!  ஆன் இதால்கோவின் புத்தம் புதிய திட்டம்!!

பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ பரிசுக்குள் இலவச போக்குவரத்து வழங்குவது சாத்தியமா என்பது குறித்த புதிய படிப்பினை ஒன்றை ஆரம்பித்துள்ளார். 
 
பிரபல பத்திரிகை ஒன்றுக்கு நகர முதல்வர் ஆன் இதால்கோ வழங்கிய நேர்காணலில் இது குறித்து சில தகவல்களை வழங்கியுள்ளார். தொடர்ச்சியாக பரிஸ் நகரம் சூழல் மாசடைவதற்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வருகிறார். இதற்கான வீதிகள் கட்டுப்பாடு, பழைய வாகனங்களுக்கு மீதான தடை என பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார். இந்நிலையில், மகிழுந்துகளின் பயன்பாட்டு தேவையை கணிசமாக குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கலாம் என தெரிவித்த ஆன் இதால்கோ, அதற்காக தாம் பரிசுக்குள் இலவச போக்குவரத்து அமல்படுத்துவது சாத்தியமா தாம் படிப்பினையை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார். 
 
நவிகோ பயண அட்டையை இலவசமாக வழங்குவது என்பது பிரெஞ்சு போக்குவரத்து வரலாற்றில் இது பெரும் புரட்சியாகும். பெரும் வருமானத்தை கொண்டுவரும் போக்குவரத்து சேவை இலவசமாக்கப்படுவதால், அதற்குரிய மாற்று வருமானம் குறித்தும் ஆராய வேண்டும் எனவும் ஆன் இதால்கோ குறிபிட்டார். இதற்காக தாம் மூன்று அதிகாரிகளை நியமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

மூலக்கதை