வீடியோ கேமிற்காக அக்காவை கொன்ற 9 வயது தம்பி!

PARIS TAMIL  PARIS TAMIL
வீடியோ கேமிற்காக அக்காவை கொன்ற 9 வயது தம்பி!

அமெரிக்காவின் மிஸிசிப்பி மாநிலத்தில் வீடியோ கேம் விளையாட அக்கா அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த 9 வயது தம்பி அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவர்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவின் மிஸிசிப்பி மாநிலத்தில் உள்ள மோன்ரே கவுண்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
 
நேற்று மதியம் டிஜோனே ஒயிட் என்ற 13 வயது சிறுமி வீடியோ கேம் விளையாட அனுமதிக்காததால் அவரது 9 வயது தம்பி துப்பாக்கியால் அக்காவை தலையில் சுட்டுள்ளான்.
 
உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒயிட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள நகர பொலிஸார், சிறுவன் கைக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 

மூலக்கதை