சர்வதேச விண்வெளி மையத்திற்கு 3 வீரர்கள் பயணம்

தினமலர்  தினமலர்
சர்வதேச விண்வெளி மையத்திற்கு 3 வீரர்கள் பயணம்

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்திற்கு மூன்று விண்வெளி வீரர்கள் நாளை(மார்ச் 21) பயணிக்க உள்ளனர்.

விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து அமைத்துள்ளன. இங்கு பணியாற்ற சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நாசாவின் ரிக்கி அர்னால்ட், ட்ருவ் பியுஸ்டல் மற்றும் ரஷ்யாவின் ஓலக் அர்டமியுவ் மூவரும் நாளை (மார்ச் 21), சோயுஷ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணமாக உள்ளனர். 23ம் தேதி அவர்கள் விண்வெளி மையத்தை சென்றடைவர்.

மூலக்கதை