பிரான்சில் உந்துருளிகளை திருடி வெளிநாட்டில் விற்ற 15 பேருக்குச் சிறை!!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரான்சில் உந்துருளிகளை திருடி வெளிநாட்டில் விற்ற 15 பேருக்குச் சிறை!!

பிரான்சில் இருந்து புதிய உந்துருளிகளை திருடி, வெளிநாட்டில் சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்துக்காக 15 பேருக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
 
நாட்டின் பல பகுதிகளில் இருந்து பல உந்துருளி விற்பனை செய்யும்  கடைகளை உடைத்து இதுவரை 250 உந்துருளிகளை திருடி விற்பனை செய்துள்ளனர். கைது சிறையிலடைக்கப்பட்ட 15 பேரும் Moldova நாட்டினைச் சேந்தவர்கள் எனவும், பிரான்சில் இருந்து திருடப்பட்ட உந்துருளிகளை பல்வேறு வழிகளில் சட்டவிரோதமாக Moldova நாட்டுக்கு அனுப்பி விற்பனை செய்துள்ளனர் எனவும் அறியமுடிகிறது. 
 
2014 ஆம் ஆண்டு Val-de-Marne இல் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட உந்துருளிகளின் மொத்த மதிப்பு 300,000 யூரோக்கள் எனவும், ஒவ்வொரு உந்துருளியும் €30,000 பெறுமானம் உள்ளவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகளின் கூரைகளில் மிகப்பெரிய அளவில் ஓட்டைகளை போட்டு, அதன் வழியாக உந்துருளிகளை கயிறு மூலம் வெளியில் எடுத்து மிக நூதனமாக உந்துருளிகளை திருடியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை