அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு அதிகளவில் பிரஷர் மாத்திரை சாப்பிட்டு விடுதியில் ெபண் ஊழியர் தற்கொலை முயற்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு அதிகளவில் பிரஷர் மாத்திரை சாப்பிட்டு விடுதியில் ெபண் ஊழியர் தற்கொலை முயற்சி

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், அதிகளவில் பிரஷர் மாத்திரை சாப்பிட்டு விடுதி அறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் புதுபாளையத்தை சேர்ந்தவர் சரண்யா(40).

இவர் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் கிளர்க்காக பணியாற்றி வருகிறார். திருமணமாகாததால் இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள  மகளிர் விடுதியில் தங்கி பணியாற்றி வருகிறார்.

சரண்யாவுக்கு சிறுநீரகம் பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தொடர்ந்து மாத்திரைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் சரண்யா இரண்டு நாட்களாக மிகவும் சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் நேற்று இரவு உணவு சாப்பிட்ட பிறகு வழக்கமாக உட்கொள்ளும் பிரஷர் மாத்திரையை அதிகளவில் உட்கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் சரண்யா மயங்கி வாயில் நுரைதள்ளிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதைபார்த்த விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே சரண்யாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை முயற்சிக்கு பணி சுமையா அல்லது குடும்ப பிரச்னை காரணமாக என விடுதியில் உடன் தங்கி இருந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அண்ணாபல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

.

மூலக்கதை