ஹிந்திக்கு செல்வாரா ஜி.வி.பிரகாஷ்?

தினமலர்  தினமலர்
ஹிந்திக்கு செல்வாரா ஜி.வி.பிரகாஷ்?

இன்றைக்கு நடிகர்களில் மிகவும் பிசியாக இருக்கிறவர் ஜி.வி.பிரகாஷ். சர்வம் தாளமயம், ஐங்கரன், 4ஜி, அடங்காதே, குப்பத்துராஜா, செம, 100 சதவிகிதம் காதல் என அவரது கால்ஷீட் டயரி நிரம்பி வழிகிறது. 2019 டிசம்பர் வரை அவரிடம் தேதிகள் இல்லை. இந்த நிலையில் அவரை இந்திப் படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்.

பாலா இயக்கிய நாச்சியார் படத்தை அண்மையில் பார்த்த அனுராக் காஷ்யப், ஜி.வி.பிரகாஷ் நடிப்பை பாராட்டி மகிழ்ந்தார். "உங்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு கதை வைத்திருக்கிறேன். ஹிந்திக்கு வாருங்கள் சேர்ந்து பணியாற்றலாம்" என்று அழைத்திருக்கிறார்.

"இப்போது தமிழில் நிறைய படங்கள் கமிட் ஆகியிருக்கிறேன். அவற்றை முடித்துவிட்டு வருகிறேன்" என்று ஜி.வி.பிரகாசும் கூறியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் ஹிந்திப் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார் என்பதும், அவருக்கு சரளமாக ஹிந்தி பேசத் தெரியும் என்பதும் சிறப்பு அம்சமாகும்.

மூலக்கதை