சின்னத்திரையில் அருவி

தினமலர்  தினமலர்
சின்னத்திரையில் அருவி

கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றியையும், விருதுகளையும் வென்ற படம் அருவி. அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி இருந்தார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். அதிதிபாலன், அஞ்சலி வரதன், லட்சுமி கோபாலசாமி, முகமது அலி பாய்க் உள்பட பலர் நடித்திருந்தனர். வேதாந்த் பரத்வாஜ், பிந்து மாலினி இசை அமைத்திருந்தனர், ஷெலாய் காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த படம் 3 மாதங்களுக்குள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது. வருகிற 25ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது.

மூலக்கதை