சாவித்ரி வரலாற்று படத்தில் வாரிசுகளை நடிக்க வைக்க முயற்சி

தினமலர்  தினமலர்
சாவித்ரி வரலாற்று படத்தில் வாரிசுகளை நடிக்க வைக்க முயற்சி

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, தற்போது சினிமாவாக தயாராகி வருகிறது. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் தயாராகிறது.
நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தை விஜயானந்தி மூவீஸ் தயாரிக்கிறது. மிக்கி ஜே.மேயர் இசை அமைக்கிறார். டேனி சாண்டஸ், லூப்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.

இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர சமந்தா, ஷாலினி பாண்டே உள்பட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் இருக்கிறது.

படத்தில் சாவித்திரியுடன் நடித்தவர்கள், அவர் காலத்தில் வாழ்ந்தவர்களாக அவர்களது வாரிசுகளையே நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது. ஓரிரு காட்சிகள் நடித்தால் போதும் என்று பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. குறிப்பாக சிவாஜி கணேசனாக அவரது பேரன் விக்ரம் பிரபுவையும், நாகேஸ்வரராவாக அவரது பேரன் நாக சைதன்யாவையும், என்.டி.ராமராவ் வேடத்தில் பாலகிருஷ்ணா, அல்லது ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரையும் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. படம் வருகிற மே 9ந் தேதி வெளிவருகிறது.

மூலக்கதை