திரையுலக பிரச்னை - ஏப்ரல் வரை நீடிக்கும் பிரச்னை

தினமலர்  தினமலர்
திரையுலக பிரச்னை  ஏப்ரல் வரை நீடிக்கும் பிரச்னை

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் இடையே எழுந்த பிரச்சினையில், தமிழ்த் திரையுலகத்தில் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் எந்த புதுப்படங்களையும் வெளியிடப் போவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. ஆனால், அதை மீறி 'தாராவி' என்ற ஒரே ஒரு படம் மட்டும் வெளியானது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

அடுத்து மார்ச் 16ம் தேதி முதல் எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும், இறுதிக் கட்டப் படப்பிடிப்பும் நடைபெறாது என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. அதன்படி பலரும் அவர்களது படப் பணிகளை நிறுத்தி வைத்தனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் இந்த முடிவுக்கு அனைத்து தயாரிப்பாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். வெளிநாடு படப்பிடிப்புகளை மட்டும் மார்ச் 23ம் தேதி வரை நடத்திக் கொள்ள அனுமதி அளித்தனர். அதன்படி சில படங்களின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து வருகிறது. அவற்றை அவர்கள் முடிக்க இன்னும் நான்கு நாட்களே உள்ளன.

தற்போது நடந்து கொண்டிருக்கும் வேலை நிறுத்தத்தால் கியூப் பிரச்சினைகளை மட்டுமல்லது மற்ற பல பிரச்சினைகளையும் முடிக்க தயாரிப்பாளர் சங்கம் தயாராகி வருகிறதாம். ஏப்ரல் வரை இந்த பிரச்சினை நீடிக்கும் என்கிறார்கள. அதற்குள் பல பிரச்சினைகளை தீர்த்துவிட்டு, புதிய தமிழ்ப் புத்தாண்டான 'விளம்பி' வருடத்தில் தமிழ்த் திரையுலகம் விஸ்வரூபம் எடுக்கும் என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

மூலக்கதை