'ஏக் தோ தீன்' : ஜாக்குலின் கவர்ச்சி நடனம், கவருமா ?

தினமலர்  தினமலர்
ஏக் தோ தீன் : ஜாக்குலின் கவர்ச்சி நடனம், கவருமா ?

ஹிந்தி ரசிகர்களை மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள பல ரசிகர்களையும் கவர்ந்த ஒரு பாடல் 'தேசாப்' படத்தில் இடம் பெற்ற 'ஏக் தோ தீன்'. 1988ம் ஆண்டு வெளிவந்த அந்தப் படம் தமிழ்நாட்டில் கூட வெற்றிகரமாக ஓடியது.

அந்த 'ஏக் தோ தீன்' பாடலுக்கு மாதுரி தீட்சித் ஆடிய அட்டகாசமான நடனம் இன்றைக்கும் பலருக்கு உடனே ஞாபகம் வரும் காட்சியாகவே இருக்கும். அப்படி ஒரு அசத்தலான நடனத்தை மாதுரி தீட்சித் ஆடியிருப்பார். அந்தப் பாடல் அவருக்குப் பெரிய பேரையும், புகழையும் தேடிக் கொடுத்தது.

அந்தப் பாடலை மார்ச் 30ம் தேதி வெளியாக உள்ள 'பாகி 2' படத்திற்காக மீண்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்தப் பாடலின் டீசர் கடந்த வாரம் வெளியான நிலையில் இன்று காலை பாடலின் ஒன்றரை நிமிடப் பாடல் வீடியோ யு டியூபில் வெளியிடப்பட்டது. மாதுரி தீட்சித் ஆடிய பாடலுக்கு 'பாகி 2' படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆடியிருக்கிறார்.

கவர்ச்சிகரமான உடையுடன், வேகமான நடன அசைவுகளுடன் ஜாக்குலின் ஆடியிருக்கும் இந்த நடனம் மாதுரி தீட்சித் நடனத்தை கண்டிப்பாக மிஞ்ச முடியாது என்பதே மாதுரி தீட்சித் ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.

மூலக்கதை