கோபி அருகே அதிகாலையில் பரபரப்பு 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோபி அருகே அதிகாலையில் பரபரப்பு 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை

கோபி: கோபி அருகே இன்று அதிகாலையில் படுக்கை அறையில் கெரசின் ஊற்றி தீவைத்து 2 மகள்களை கொன்ற தாய், தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா(50), விவசாயி. இவரது மனைவி ஜெயமணி(45).

மூத்த மகள் தனுஷியா(18) ஈரோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டும், இளைய மகள் பவித்ரா(14) கவுந்தப்பாடி தனியார் பள்ளியில் 8ம் வகுப்பும் படித்து வந்தனர். பச்சபாலி என்ற இடத்தில இவர்களுக்கு சொந்தமான நெல் வயல் உள்ளது. இன்று அறுவடை பணி நடைபெற இருந்ததால், அதிகாலை 5. 30 மணிக்கே ராஜா வயலுக்கு சென்று விட்டார்.

படுக்கை அறையில் தனுஷியாவும், பவித்ராவும் தூங்கிக்கொண்டிருந்தனர்.

ராஜா வெளியில் சென்ற சிறிது நேரத்தில், படுக்கை அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு கட்டிலில் ஜெயமணி கெரசினை ஊற்றி தீவைத்தார். தீ பட்டதும் திடுக்கிட்டு எழுந்த மகள்கள் அலறினர்.

ஜெயமணியும் தனது உடலில் கெரசின் ஊற்றி தீவைத்துக்கொண்டார். வலி தாங்க முடியாமல் 2 மகள்களும் பாத்ரூமை நோக்கி ஓடினர். ெஜயமணியும் பின்னால் ஓடினார்.

பாத்ரூம் குழாயை திறந்துள்ளனர். ஆனால் தண்ணீர் வரவில்லை.

இதனால் சிறிது நேரத்திலேயே மூவரும் பாத்ரூமுக்குள்ளேயே கருகி இறந்தனர். அக்கம்பக்கத்தினர் தகவலின்பேரில் வயலுக்கு சென்ற ராஜா மற்றும் கவுந்தப்பாடி போலீசார் விரைந்து வந்தனர். முன்புற கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு 3 பேரும் கரிக்கட்டையாக கிடந்தனர். படுக்கை அறையும் எரிந்து நாசமானது.

பவானி தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.
இரவு வரை அனைவரும் நன்றாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர். காலையில் இந்த முடிவு எடுத்ததற்கான காரணம் தெரியவில்லை.

போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். சமீபத்தில்தான் குரங்கணி தீவிபத்தில், கவுந்தப்பாடியை சேர்ந்த விவேக் திவ்யா தம்பதி, தமிழ்ச்செல்வன், கண்ணன் ஆகியோர் பலியாகினர்.

அந்த சோகம் அடங்குவதற்குள் இன்று 3 பேர் இறந்த சம்பவம் கவுந்தப்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை