வீட்­டுக்­க­டனை அடைக்க இது ஏற்ற நேரமா?

தினமலர்  தினமலர்
வீட்­டுக்­க­டனை அடைக்க இது ஏற்ற நேரமா?

முன்­னணி வங்­கிகள் மற்றும் வீட்­டுக்­கடன் நிறு­வ­னங்கள் வீட்­டுக்­க­ட­னுக்­கான வட்டி விகி­தத்தை உயர்த்த துவங்­கி இ­ருக்­கின்­றன.

பொது­வாக கட­னுக்­கான வட்டி விகிதம் உயரும் சூழலில், கடனை முன்­கூட்டியே அடைப்­பது சரி­யாக இருக்­குமா எனும் கேள்­வியை எழுப்பும். பல­ரது மனதில் இப்­போதும் இந்த கேள்வி எழுந்­தி­ருக்­கலாம். வீட்­டுக்­க­டனை முன்­கூட்டியே அடைப்­பது தொடர்­பான முடிவு எடுக்கும் போது, அந்த தொகையை வேறு வழி­களில் முத­லீடு செய்­வது வட்டி சேமிப்பை விட அதிக பலன் தருமா... என பரி­சீ­லித்து பார்க்க வேண்டும்.

தற்­போ­தைய சூழலில், பங்­குச்­சந்தை ஏற்ற இறக்­க­மான போக்கில் இருக்­கி­றது. வைப்பு நிதி பலன், வரிக்­குபின் லாபம் அளிப்­ப­தாக இல்லை. கடன்சார் முத­லீ­டுகளின் பலனும் குறைந்­தி­ருக்­கி­றது. எனவே வாய்ப்­புள்­ள­வர்கள் கட­னுக்­கான ஒரு தொகையை முழு­வதும் அல்­லது ஒரு பகு­தியை முன்­கூட்­டியே செலுத்­து­வது பொருத்­த­மாக இருக்கும். நீண்ட கால கடனை முன்­கூட்­டியே அடைப்­பதில் பல சாத­கங்கள் இருக்­கின்­றன.

அதிக கால கடன் என்றால், நாம் செலுத்தும் வட்­டியும் அதி­க­மாக இருக்கும். மேலும் கட­னுக்­கான வரிச்­ச­லுகை கழிவில், ஆண்­டுக்கு, 2 லட்சம் ரூபாய் என்­ப­தையும் பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம்.ஆனால் எல்லாருக்கும் இது சாத்­தி­ய­மா­காது. முன்­கூட்­டியே கடன் தொகையை செலுத்த முடி­யா­த­வர்கள் கட­னுக்­கான மாதத்­த­வ­ணையை அதி­க­ரிப்­பதன் மூலம் கடனை முன்­கூட்­டியே அடைக்க திட்­ட­மி­டலாம்.

மூலக்கதை