கருப்பட்டி காய்ச்ச பயிற்சி

தினமலர்  தினமலர்
கருப்பட்டி காய்ச்ச பயிற்சி

சென்னை: ‘கருப்பட்டி காய்ச்ச பயிற்சி தரப்படும்’ என, செம்மை பனைப்பணி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.சென்னை மற்றும் பெங்களூருவில், செம்மை பனைப்பணி செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, மரபு கூடல் நிகழ்ச்சிகள் மாதம் தோறும், முதல் ஞாயிறு அன்று நடத்தப்படுகிறது. பதநீர் பருவம் துவங்கியதை தொடர்ந்து, இவ்வமைப்பு சார்பில், கருப்பட்டி காய்ச்ச நேரடி செயல் விளக்கம் தரப்படுகிறது. சொந்த தொழில் ஆர்வமுடையவர்கள் இதில் பங்கேற்கலாம் என இவ்வமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

மூலக்கதை