15 லட்சம் ஏர்செல் சந்தாதாரர்களை வளைத்தது பார்தி ஏர்டெல் நிறுவனம்

தினமலர்  தினமலர்
15 லட்சம் ஏர்செல் சந்தாதாரர்களை வளைத்தது பார்தி ஏர்டெல் நிறுவனம்

சென்னை: தொலை தொடர்பு சேவையில், முதலிடத்தில் உள்ள, ‘பார்தி ஏர்டெல்’ நிறுவனம், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட, ‘ஏர்செல்’ சந்தாதாரர்களை, புதிதாக இணைத்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இந்நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, இரண்டு கோடியாக அதிகரித்து உள்ளது. இந்நிறுவனத்தின், தமிழகம் – கேரளா பிரிவின் தலைமை செயல் அதிகாரி, மனோஜ் முரளி கூறுகையில், ‘‘நாடு முழுவதும், 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஏர்செல் சந்தாதாரர்கள், ஏர்டெலில் இணைந்து உள்ளனர். ‘‘இதன் மூலம் அவர்கள், ஏர்டெல் நிறுவனத்தை அதிகமாக நம்புவது தெரிகிறது. புதிதாக இணைந்து உள்ளவர்களுக்கு, சிறப்பான சேவை வழங்குவோம்,’’ என்றார்.பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட, ஏர்செல் சந்தாதாரர்களை, புதிதாக இணைத்து உள்ளது. வோடபோன் நிறுவனமும், 10 லட்சம் ஏர்செல் சந்தாதாரர்களை ஈர்த்துள்ளது.மலேஷியாவின், ‘மேக்சிஸ்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஏர்செல், 19 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி, தொலை தொடர்பு சேவையை நிறுத்தியுள்ளது. இதனால், இந்நிறுவன சந்தாதாரர்கள், வேறு நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர்.

மூலக்கதை