49 பேர் கொல்லப்பட்ட விமான விபத்தில் உயிர் பிழைத்தவரின் உருக்கமான பதிவு!

PARIS TAMIL  PARIS TAMIL
49 பேர் கொல்லப்பட்ட விமான விபத்தில் உயிர் பிழைத்தவரின் உருக்கமான பதிவு!

நேபாள தலைநகர் காட்மண்டூவில் திங்களன்று விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து லேசான காயங்களுடன் உயிர் தப்பியதன் காரணத்தை நபர் ஒருவர் முதன் முறையாக வெளியிட்டுள்ளார்.
 
நேபாளத்தில் பயண முகவராக பணியாற்றி வருபவர் தயாராம் தம்ராகார். இவரே 49 பேரை பலி வாங்கிய அந்த கொடூர விபத்தில் இருந்து உயிர் தப்பியது எவ்வாறு என முதன் முறையாக வெளிப்படுத்தியவர்.
 
சம்பவத்தன்று தாம் மது ஏதும் அருந்தாமல் இருந்ததாகவும், அதனால் தமக்கு அவசர வாசலை உடனடியாக அணுக முடிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மட்டுமின்றி தாம் தப்பித்த நிலையில் எஞ்சிய சிலரையும் தம்மால் மீட்க முடிந்தது எனவும் தயாராம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
 
குறித்த விபத்தில் 22 பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர். மட்டுமின்றி 49 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
 
விமானம் ஓடுதளத்தில் மோதியதும், தம்மால் இருக்கையில் இருந்து விடுவித்துக் கொண்டு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என முடிவெடுத்ததாகவும்,
 
அவசர வாசலை முழு பலத்துடன் திறக்க தம்மால் முடிந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மது அருந்தாத காரணத்தாலையே தம்மால் உயிர் தப்ப முடிந்தது மட்டுமின்றி சிலரையேனும் காப்பாற்றவும் முடிந்தது என்றார் தயாராம்.
 
விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தயாராம் மற்றும் 14 பேர் கொண்ட குழு அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளது.
 
தற்போது அந்த குழுவில் சிலர் தயாராமின் உதவியால் உயிர் தப்பி காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
 

மூலக்கதை