தொழிலகத்துக்கு வந்திறங்கிய கஞ்சா பொதிகள்! - காவல்துறையினர் விசாரணை!!

PARIS TAMIL  PARIS TAMIL
தொழிலகத்துக்கு வந்திறங்கிய கஞ்சா பொதிகள்!  காவல்துறையினர் விசாரணை!!

Val-d'Oise இல் உள்ள தொழிலகத்துக்கு, அவர்களின் உபகரணங்களோடு, 600 கிலோ எடையுள்ள கஞ்சா பொதிகளும் வந்திறங்கியுள்ளன. 
 
நேற்று வெள்ளிக்கிழமை Herblay மற்றும் Saint-Ouen-l'Aumône க்கு இடைப்பட்ட பகுதியில் இருக்கும் தொழிலகம் ஒன்றுக்கு தென் அமெரிக்காவில் இருந்து தொழிலக உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வாகனம் ஒன்றில் வந்துள்ளன. வழக்கம் போல் தொழிலக ஊழியர்கள் வாகனத்தை திறந்து பொதிகளை இறக்க முயன்றபோது, அவர்களுக்கு அறிமுகமில்லாத அந்நியமான பொதிகள் இருப்பதை கவனித்துள்ளனர். 12 பெட்டிகளில் கஞ்சா பொதி அனுப்பப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.  உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க,  வாகனத்துக்குள் இருந்த 600 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 
 
மீட்கப்பட்ட கஞ்சா போதை மருந்தின் மொத்த மதிப்பு 25 மில்லியன் யூரோக்களாகும். Versailles காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூலக்கதை