அவதானம்! - இன்றும் நாளையும் பனிப்பொழிவு!!

PARIS TAMIL  PARIS TAMIL
அவதானம்!  இன்றும் நாளையும் பனிப்பொழிவு!!

இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பரவலான பகுதிகளில் பனி பொழியும் எனவும் கடும் குளிர் நிலவும் எனவும் பிரெஞ்சு வானிலை ஆய்வு மைய்யம் அறிவித்துள்ளது. 
 
பிரான்சின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் அதிகளவான பனிப்பொழிவும் கடும் குளிரும் நிலவும் எனவும், மழை பொழிவு இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு பிராந்தியங்களில் -10° இல் இருந்து -15° செல்சியஸ் வரை குளிர் நிலவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்குள் மிதமான வெப்பம் நிலவும் எனவும் 8° செல்சியஸ் வரை  காலநிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடற்றவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ள தற்காலிக குளிர்கால தங்குமிடங்கள் வரும் மார்ச் 26 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் பனிப்பொழிவும், நாளை மறுநாள் திங்கட்கிழமை கடும் குளிரும் இடம்பெறும் எனவும் வானிலை மைய்யத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை