உலகின் சிக்கலான வரிமுறை இந்தியாவின் ஜி.எஸ்.டி.,

தினமலர்  தினமலர்
உலகின் சிக்கலான வரிமுறை இந்தியாவின் ஜி.எஸ்.டி.,

புதுடில்லி: இந்தியாவின் ஜி.எஸ்.டி., வரி, உலகின் மிகவும் சிக்கலான வரிமுறை என உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜி.எஸ்.டி., வரி முறையை பின்பற்றும் 115 நாடுகளுடன் ஒப்பிடுகையில், கூடுதல் வரிவிகிதத்துடனும், அதிக கட்டமைப்புடனும் இருப்பதால் இந்தியாவின் ஜி.எஸ்.டி., மிகவும் சிக்கலான வரிமுறையாக உள்ளது. ஜி.எஸ்.டி., வரி அதிகம் வசூல் செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. அதே சமயம் 28 சதவீத வரி என்பது, உலகளவில் 2வது அதிகபட்ச ஜி.எஸ்.டி., வரம்பாகவும் உள்ளது.
சிக்கலான இந்திய ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறையை ‛0% வரிவிகிதம்' ஓரளவுக்கு எளிமையாக்குகிறது. இந்திய ஜி.எஸ்.டி., விரிவிதிப்பு முறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்தால், பல மாதங்களுக்கு நாட்டில் பொருளாதார மந்த நிலை உண்டாகும். இருப்பினும் அதனால் நீண்ட காலத்திற்கு பலன் கிடைக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை