பரிஸ் பாதுகாப்பானதாக இல்லை! - கருத்துக்கணிப்பில் 58 வீத பெண்கள் தெரிவிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ் பாதுகாப்பானதாக இல்லை!  கருத்துக்கணிப்பில் 58 வீத பெண்கள் தெரிவிப்பு!!

பரிசில் வசிப்பது பாதுகாப்பானதா என கேட்கப்பட்ட கேள்விக்கு 58 வீதமான பரிஸ் வாழ் பெண்கள் 'இல்லை' என பதிலளித்துள்ளனர். 
 
கடந்த 2017 ஆம் ஆண்டு l’Institut d’aménagement et d’urbanisme (IAU) (திட்டமிடுதல் மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனம்) இல்-து-பிரான்சுக்குள் 10,500 பேர்களிடம் இந்த கேள்வியை கேட்டிருந்தது. இந்த கருத்துக்கணிப்பில் பல்வேறு தரபட்ட பதிகள் வழங்கபட்டிருந்தன. பரிசில், இரவில் மெற்றோ சுரங்கங்களில் நடபதற்கு, இரவில் வீதிகளில் நடந்து செல்ல மிக அச்சமாக உணருவதாக பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். 
 
40 வீதமான பெண்களுக்கு பொது போக்குவரத்தில் பயணிக்க பாதுகாபாக இல்லை எனவும், 31 வீதமான பெண்களுக்கு அக்கம் பக்கத்தினர் இருக்கும் இருக்கும் பிதும் தனியாக வசிக்க பயமாக உள்ளது எனவும், 9 வீதமான பெண்கள் தனித்த வீட்டில் வசிக்க  அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 
 
மொத்தமாக 58 வீதமான பெண்கள் பரிசில் வாழ்வது பாதுகாப்பானது இல்லை என தெரிவித்துள்ளனர். மீதமான 42 வீத பெண்களிடம், பாதுகாப்பானதாக உணருகின்றீர்களா என கேட்டதற்கு, 'பயம் இல்லை, ஆனாலும் விழிப்புடன் இருக்கின்றோம்!' என தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை