நடை மேம்பாலம் சரிந்தது: 6 பேர் பலி

தினமலர்  தினமலர்
நடை மேம்பாலம் சரிந்தது: 6 பேர் பலி

மியாமி: அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள, புளோரிடா சர்வதேச பல்கலை அருகில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நடை மேம்பாலம் சரிந்ததில், ஆறு பேர் உயிரிழந்தனர்.மியாமியில் உள்ள சர்வதேச பல்கலையையும், எதிர்ப்புறம் உள்ள குடியிருப்பையும் இணைக்கும் வகையில், புதிதாக நடை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு, அமெரிக்க போக்குவரத்து துறை, 922 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது. அடுத்த ஆண்டு துவக்கத்தில், நடை மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.ஆறு வழி எக்ஸ்பிரஸ் தடத்தில், 950 டன் எடை, 53 மீட்டர் நீளமுள்ள இந்த நடை மேம்பாலம், நேற்று காலை, ஆறு மணி நேரத்தில் அமைக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில், நடை மேம்பாலம் சரிந்ததில், பலர் இடிபாடுகளில் சிக்கினர். இதில், உயிரிழந்த ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; படுகாயமடைந்த, 10க்கும் மேற்பட்டோர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை