இரானி கோப்பை கிரிக்கெட் விதர்பா 5 விக்கெட்டுக்கு 702

தினகரன்  தினகரன்

நாக்பூர் : இதர இந்திய அணியுடனான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் (5 நாள்), ரஞ்சி சாம்பியனான விதர்பா அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 702 ரன் குவித்துள்ளது. விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற விதர்பா அணி முதலில் பேட் செய்தது.இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 598 ரன் எடுத்திருந்தது. வாசிம் ஜாபர் 285 ரன், வாங்கடே 44 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். மழை காரணமாக உணவு இடைவேளைக்குப் பிறகே ஆட்டம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. முச்சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாசிம் ஜாபர் மேற்கொண்டு 1 ரன் மட்டுமே சேர்த்து (431 பந்து, 34 பவுண்டரி, 1 சிக்சர்) சித்தார்த் கவுல் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். வாத்கர் 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 702 ரன் குவித்துள்ளது. வாங்கடே 99 ரன், சர்வதே 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 4வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை