வரும் நாட்களில் பூக்கள் விலை அதிகரிக்கும்

தினமலர்  தினமலர்
வரும் நாட்களில் பூக்கள் விலை அதிகரிக்கும்

சென்னை : மல்லி வரத்து அதி­க­ரித்­துள்­ள­தால் விலை­யும் குறைந்து வரு­கிறது. சென்­னை­யில் கோயம்­பேடு, பாரி­முனை உள்­ளிட்ட பூக்­கள் சந்­தை­யில், மல்லி வரத்து அதி­க­ரித்­துள்­ளது.

ஒரு கிலோ மல்லி, 300 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கிறது. இதில் சீச­னின் இறு­தி­கட்­டத்­தில் உள்ள ஜாதி­மல்லி, 1 கிலோ, 500 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது. அதே­போல், ரோஜா வகை­கள் வகைக்கு ஏற்ப, 60 – 100 ரூபாய் வரை விற்­கப்­ப­டு­கிறது. இதில் நேரம் மற்­றும் விற்­ப­னைக்கு ஏற்ப, ஒரு கிலோ ரோஜா, 30 ரூபாய்க்கு கூட விற்­ப­னை­யா­கிறது. வரத்து குறைந்­த­தால், சாமந்தி ஒரு கிலோ, 140 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது. கன­காம்­ப­ரம் வரத்து துவங்­கி­யுள்­ள­தால், தற்போது 1 கிலோ, 500 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது.

இது­கு­றித்து, பாரி­முனை பூ வியா­பா­ரி­கள் கூறி­ய­தா­வது: மதுரை, நிலக்­கோட்டை, திண்­டி­வ­னம், பெரி­ய­பா­ளை­யம் சுற்­று­வட்­டா­ரத்­தி­லி­ருந்து மல்லி வரத்து அதி­க­ரித்­துள்­ளது.இத­னால், விலை குறைந்து வரு­கிறது. இருப்­பி­னும் விவ­சா­யத்­திற்­கான தண்­ணீர் பற்­றாக்­கு­றை­யாக இருப்­ப­தால், வரும் காலங்­களில் பூக்­கள் விலை அதி­க­ரிக்­கும். இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

மூலக்கதை